உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இனி சிறப்பு வகுப்புகள் துவக்கம்

மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இனி சிறப்பு வகுப்புகள் துவக்கம்

கோவை : அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள், நேற்று திறக்கப்பட்ட நிலையில், மூன்றாம் பருவ கற்றல் செயல்பாடுகள் துவங்க, பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ கல்விமுறை நடைமுறையில் இருப்பதால், மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.விடைத்தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்தல், மதிப்பெண்களை பதிவு செய்தல் போன்ற பணிகளுக்கு பின், கற்பித்தல் பணியும் துவங்கியது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, முழு சிலபஸில் இருந்து, அரையாண்டு தேர்வில் வினாக்கள் இடம்பெற்றன.இதில், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், பாடவாரியாக தோல்வியை தழுவியோர் குறித்த விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.இதோடு, மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, இனி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்; அலகுத்தேர்வு, திருப்புதல் தேர்வு என, பொதுத்தேர்வு தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் துவங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை