மேலும் செய்திகள்
தாம்பரம் - துாத்துக்குடி தீபாவளி சிறப்பு ரயில்
29-Oct-2024
கோவை ; கூட்ட நெரிசலை தவிர்க்க போத்தனுார் - சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அதன்படி, போத்தனுார் - சென்னை(06160) சிறப்பு ரயில் வரும், 3ம் தேதி காலை, 7:45 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு, அன்றைய தினம் மாலை, 4:50 மணிக்கு சென்னை சென்றடையும்.சிறப்பு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.
29-Oct-2024