| ADDED : ஜன 05, 2024 01:50 AM
கோவை;'ஆன்மிகம் அறிவை கடந்தது' என, கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா பேசினார்.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'எப்போ வருவாரோ' எனும் ஆன்மிக சொற்பொழிவு கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது.'திருமூலர்' எனும் தலைப்பில், கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா பேசியதாவது:சிவானந்தத்தை எளிமையாக எடுத்துக்கூறியவர் திருமூலர். அனைத்து நேரங்களிலும் சிவனை வணங்கினால் அவரே சதாசிவம். அன்பும், சிவனும் வேறு என நினைக்கக்கூடாது. சிவனை நினைத்துக் கொண்டிருந்தால், அன்பு தேடி வரும். அனைவரது ஜீவனுக்குள்ளும் சிவன் இருக்கிறார். அன்புக்கும், பற்றுக்கும் வித்தியாசம் உள்ளது. பற்று தவிர்க்கப்பட வேண்டியது. அன்பு தானாக தேடி வரக்கூடியது. சிவன் போல கடவுள் இல்லை. தேடினாலும் கிடைக்காது என, திருமந்திரம் கூறுகிறது. இறைவனை வணங்க காலம் கிடையாது. அடையாளத்தை விட்டால், இறைவனை அடையலாம். ஆன்மிகம் அறிவை கடந்தது. இறைவனை உணர்ந்து பார்க்க வேண்டும் என்கிறார் திருமூலர். சிவன் எனும் நெருப்பை அடைபவர்கள் முக்தி அடைகின்றனர். இறை வழிபாட்டை உதாசீனம் செய்தால், உடல்நிலை மோசமடையும். தனக்குள் இருக்கும் சிவனை அனைவரும் உணர வேண்டும். இறைவனே நம்மை நெறிப்படுத்த இன்பம், துன்பத்தை தருகிறார்.இவ்வாறு, அவர் பேசினார்.