உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் விளையாட்டு பயிற்சி பாதிக்கப்படும் அபாயம்

அரசு பள்ளிகளில் விளையாட்டு பயிற்சி பாதிக்கப்படும் அபாயம்

கோவை: கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் பணியாற்றிய, 12 உடற்கல்வி ஆசிரியர்கள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர். இதனால், ஏற்கனவே நிரப்பப்படாமல் இருந்த உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்துள்ளன. இது மாணவர்களின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி பயிற்சியை பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது.தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் ஜூன் 2ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், கோவை அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பற்றாக்குறை சிக்கலாக மாறியுள்ளது. ஐந்து ஆண்டுகளாக, காலியாக உள்ளன பணியிடங்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை நிரப்பாத நிலை தொடர்கிறது.இது குறித்து அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கூறுகையில், 'கடந்த ஐந்து ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில், பிற பாட ஆசிரியர்களே மாற்றுப் பொறுப்பாக மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகளை நடத்தி வந்தனர். தற்போது ஓய்வு பெறும் ஆசிரியர்களால், நிலுவையில் உள்ள பணியிடங்கள் மேலும் அதிகரிக்கின்றன.2025 - 2026 கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் நிலையில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட வேண்டும். இல்லையெனில், மாணவர்களின் உடல் திறன் மற்றும் விளையாட்டு வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை