ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு திருக்கல்யாண வைபவம்
கோவை, ;சிங்காநல்லுார் உப்பிலிபாளையம், ரங்கநாதபுரத்தில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் சித்திரைத்திருவிழா திருக்கல்யாண மஹோற்சவம், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. சித்திரைத்திருவிழா கடந்த 13ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அன்று மாலை மேள தாளங்கள் முழங்க கம்பம் நடப்பட்டது. நேற்று காலை 7:00 மணிக்கு சக்தி கரக ஊர்வலம், மேள தாளங்கள் முழங்க நடந்தது. பகல் 1 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும், அம்மனுக்கு அலங்கார பூஜையும், மாவிளக்கு மற்றும் முளைப்பாரி உற்சவமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீராடுதலும், அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை மறுபூஜை நடக்கிறது. நேற்று பகல் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பரிமாறப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.