வால்பாறை:வால்பாறை அரசு நடுநிலைப் பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்த நிலையில், மாணவர்கள் ஒரே வகுப்பறையில் அமர வைக்கப்பட்டதால், கற்பிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த சோலை யாறு எஸ்டேட் அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 37 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. முகாமில் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றனர்.
Galleryபள்ளியில் மொத்தம் உள்ள ஐந்து வகுப்பறையில், நா ன்கு வகுப்பறைகள், முகாம் நடத்த பயன்படுத்தப்பட்டதால், ஒரே வகுப் பறையில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தரையில் அமர்ந்து படித்தனர். ஆசிரியர்கள் கூறிய தாவது: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுவதால், மாணவர்கள் வேறு வழியின்றி ஒரே வகுப்பறையில் அமரவைத்து பாடம் சொல்லி கொடுத்தோம். 'மைக் செட்' சப்தத்தால் மாணவர்கள் படிக்க முடியாமலும், சிறுநீர் கழிக்க கூட வெளியில் செல்ல முடியாமலும் தவித்தனர். மதிய உணவு இடைவேளையின் போதும், மாணவர்கள் வெளியில் செல்ல முடியாமல், வகுப்பறையில் அமர்ந்தபடி உணவு உட்கொண்டனர். தொடர்மழையால் முகாமிற்கு வந்தவர்கள், பள்ளி வகுப்பறை முன்பாக திரண்டு நின்றனர். இதனால், மாணவர்கள் கல்வி பாதித்தது. இவ்வாறு, கூறினர். நகராட்சி கமிஷனர் கணேசனிடம் கேட்ட போது, ''சோலையாறு எஸ்டேட் பகுதியை பொறுத்த வரை, முகாம் நடத்த போதிய இடவசதி இல்லாததால், வேறு வழியின்றி அரசு பள்ளியில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ''இருப்பினும், பள்ளியில் முகாம் நடந்ததால், மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு தனி அறையில் பாடம் நடத்தப்பட்டது. அடுத்த முறை பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் முகாம் நடத்தப்படும்,'' என்றார்.