நைட்டிங்கேல் தலைவருக்கு நட்சத்திர கல்வியாளர் விருது
கோவை : கேரளாவின் பத்திரிகை நிறுவனமான, 'தீபிகா' 137வது ஆண்டு விழாவை கொண்டாடியது. இதில், பல்வேறு துறைகளின் சாதனையாளர்கள், விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இதில், கல்வித்துறைக்கான நட்சத்திர கல்வியாளர் விருது மதுக்கரை, நைட்டிங்கேல் கல்லுாரி குழுமத் தலைவர் மனோகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வில்லாத சமூக சேவை மற்றும் பாராமெடிக்கல் துறையில் முதன்மை சாதனையாளர்களாக உள்ளதை பாராட்டி, இவ்விருது வழங்கப்பட்டது.தீபிகா பத்திரிகையின் நிறுவனர் மைக்கேல், பிஷப் பால் அலப்பாடு, மேலாளர் திக்னியாத் ஆகியோர் உடனிருந்தனர்.