உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி 40 பேர் பங்கேற்பு; முதற்கட்டமாக 23 பேர் தேர்வு

மாநில பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டி 40 பேர் பங்கேற்பு; முதற்கட்டமாக 23 பேர் தேர்வு

கோவை ; கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடந்த மாணவியர் மற்றும் பெண்கள் பிரிவு அணிகளுக்கான தேர்வில், 23 பேர் முதட்டமாக தேர்வு செய்ப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டத்தில், 69வது இளையோர் மற்றும், 70வது பெண்கள் பிரிவுகளில், மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும், 30, டிச., 1ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கென, கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் மாணவியர் மற்றும் பெண்கள் பிரிவு அணிகளுக்கான தேர்வு நேற்று நடந்தது.நேரு ஸ்டேடியம் எதிரே கோவை மாநகராட்சி மைதானத்தில் காலை, 7:30 மணி முதல் தேர்வுத்திறன் போட்டிகள் நடந்தன. இதில், இரு பிரிவுகளிலும், 40 பேர் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக பெரும்பாலானோர் இருந்தனர்.மேலும், வெளி மாவட்டங்களில் இருந்து கோவையில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவியர், அதற்கான சான்றிதழ்கள் சமர்ப்பித்து பங்கேற்றனர். 40 பேரில் போட்டித் திறன் அடிப்படையில் இளையோர் பிரிவில், 13 பேர், பெண்கள் பிரிவில், 10 பேர் என, 23 பேர் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களில் இருந்து இரு பிரிவுகளிலும் தலா, 10 பேர் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டு, மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. தலா, 10 பேர் அடங்கிய அணி அடுத்த வாரம் நான்கு நாட்கள் முகாம் நடத்தப்பட்டு, அதில் இருந்து இறுதி செய்யப்படவுள்ளதாக கழக பொது செயலாளர் மார்ஷல் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை