| ADDED : ஜன 24, 2024 09:23 PM
குடிமங்கலம்,-குடிமங்கலம் ஒன்றியம், கொள்ளுப்பாளையம் கிராமத்தில், கறவை மாடுகளுக்கான சினை தங்காமை மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் துறை சார்பில், கறவை மாடுகளுக்கான சினை தங்காமை மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்து, 'கறவை மாடுகளின் மலட்டுத்தன்மையை நீக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்,' என்ற தலைப்பிலான கையேட்டை வெளியிட்டார்.கால்நடை மருத்துவ கல்லுாரி ஈனியல் துறையின் தலைவர் செந்தில்குமார், இணை பேராசிரியர் ரீனா, உதவி பேராசிரியர் கல்யாண் உள்ளிட்டோர் கறவை மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில், 42 கறவை மாடுகளுக்கு, மலடு நீக்க சிகிச்சை வழங்கப்பட்டது; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., யின் தாது உப்பு கலவை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கப்பட்டது.கொள்ளுப்பாளையம் சுற்றுப்பகுதி கால்நடை வளர்ப்போர் பங்கேற்றனர்.