உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்டவாளத்தில் கல் :ரயிலை கவிழ்க்க சதியா?

தண்டவாளத்தில் கல் :ரயிலை கவிழ்க்க சதியா?

கோவை: தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கான்கிரீட் கல் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ஏறிய நிலையில், இது ரயிலை கவிழ்க்க சதியா என, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று அதிகாலை, 2:15 மணிக்கு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. பீளமேடு ஸ்டேஷனை கடந்து, ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்றபோது, பயங்கர சத்தம் கேட்டதால், டிரைவர் ரயிலை நிறுத்தினார். கீழே இறங்கி பார்த்தபோது, கான்கிரீட் கல் உடைந்து சிதறி கிடந்தது. பின், கோவை ஸ்டேஷனுக்கு ரயில் சென்றதும், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். 'இரவில் சிலர் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். போதையில், கற்கள் மற்றும் இரும்பு பொருட்களை தண்டவாளத்தில் துாக்கி வைத்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் ஏதேனும் சதி உள்ளதா என, 'சிசிடிவி' காட்சி பதிவுகள் உதவியுடன் விசாரிக்கிறோம்' என, போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ