உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இலக்கியங்களில் கதைகள் கல்லுாரியில் கருத்தரங்கம் 

இலக்கியங்களில் கதைகள் கல்லுாரியில் கருத்தரங்கம் 

பொள்ளாச்சி: பூசாரிப்பட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை கல்லுாரியில், தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில், 'இலக்கியங்களில் கதைகள்' என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா தலைமை வகித்தார். முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக, உதவிப் பேராசிரியர் சம்பத்குமார் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக சிறார் எழுத்தாளர் பூங்கொடி கலந்து கொண்டு பேசுகையில், ''தாய்மொழியில் இளைஞர்களுக்கு அறநெறியை கூறும் கதைகள் ஏராளம் உள்ளன. அவற்றை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என்றார். தமிழ்த்துறை தலைவர் அருள்ஜோதி, உதவிப் பேராசிரியர்கள் சரளா, மேனகா, இந்துரேகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ