மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்கள் பதவி ஏற்பு
20-Jul-2025
கோவை; பன்னீர்மடை, அக்சயா சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவப் பேரவை பதவி ஏற்பு விழா நடந்தது. பள்ளியின் செயலாளர் பட்டாபிராம் மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புஉரையாற்றினார். பதவி ஏற்ற அக்சயா மாணவப் பேரவை தலைவர்கள் அனைவரும், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, மாணவர்கள் பரதநாட்டியம், பாடல், பொம்மலாட்டம், குழு நாடகம், போன்ற கலை நிகழ்ச்சிகள் வாயிலக, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், முதல்வர் ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
20-Jul-2025