மேலும் செய்திகள்
பல்லடத்தில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமையுமா?
05-Oct-2025
கோவை: கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில், நேற்று முன்தினம் இரவு, அரசு பஸ் மோதியதில் பஸ்சுக்கு காத்திருந்த கல்லுாரி மாணவி பலியானார். மூவர் காயமடைந்தனர். இது தொடர்பாக, பஸ் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில், உயிரிழந்தது கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த ஹரிணி, 19 எனத் தெரிந்தது. கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். விவசாயக்குடும்பத்தை சேர்ந்தவர். விபத்தில் காயமடைந்த இரு பெண்கள், புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். காயமடைந்த மூன்றாவது நபர், சலீவன் வீதியை சேர்ந்த சுந்தர்ராஜ், 75 தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விபத்தை ஏற்படுத்திய சுங்கம் பஸ் டெப்போவை சேர்ந்த டிரைவர் மார்ட்டின், 35, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
05-Oct-2025