உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக அணியில் விளையாட மாணவி வைஷ்ணுதேவி தேர்வு

தமிழக அணியில் விளையாட மாணவி வைஷ்ணுதேவி தேர்வு

கோவை; கோவை மாவட்டத்தைச் சார்ந்த மாணவி வைஷ்ணுதேவி, தமிழ்நாடு அணிக்காக, பூப்பந்தாட்ட போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தென்காசி மாவட்டம், ஐ.சி.ஐ., மேல்நிலைப் பள்ளியில், 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கான ஐவர் பூப்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது.மாநில அளவில், சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில், 35 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்ட பெண்கள் அணி, காலிறுதி சுற்றில், மதுரை மாவட்ட அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தது. ஜூனியர் மாணவர்கள் பிரிவில், கோவை மாவட்ட அணி, இரண்டாவது சுற்றில், நெல்லை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.ஜூனியர் மகளிர் பிரிவில், கோவை மாவட்ட அணி, முதல் சுற்றில் தஞ்சாவூர், இரண்டாவது சுற்றில் திருப்பூர் மாவட்ட அணியை வென்று, காலிறுதியில், விழுப்புரம் அணியிடம் வெற்றி வாய்ப்பு இழந்தனர்.போட்டியில், கோவை மாவட்டத்தைச் சார்ந்த மாணவி வைஷ்ணுதேவி, தமிழ்நாடு அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவருக்கும், விளையாடிய வீரர்களுக்கும், கோவை மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை