உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி- வினா அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவ, மாணவியர்

மாநகராட்சி பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி- வினா அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய மாணவ, மாணவியர்

கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் 'பதில் சொல்; பரிசை வெல்' வினாடி- வினா போட்டியில், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் அசத்தலாக பதில் அளித்தனர்.பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. இதை வாசிக்கும் மாணவர்களிடம், கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது.மாநகராட்சி பகுதிகளில் உள்ள, 65 பள்ளிகளிலும், மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, இப்போட்டி நடத்தப்படுகிறது.பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரையிறுதி போட்டி நடக்கும். இதில், இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும். இறுதி போட்டியில் இடம்பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன.செல்வபுரம், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடந்த, போட்டிக்கான தகுதி சுற்று பொது அறிவுத்தேர்வை, 167 பேர் எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது.மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி கவுசிகா, 9ம் வகுப்பு மாணவி சன்பியா ஆகியோர், முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் சண்முகப்பிரியா, கனகமணி, ராதா ஆகியோர் உடனிருந்தனர்.அதேபோல், செல்வபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் நடந்த, தகுதி சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வை, 258 பேர் எழுதினர்.மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியின் நிறைவில், 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவர்கள் சக்தீஸ்வர், பிரஜின் குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி உதவி தலைமையாசிரியர் சுப்ரமணியன் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர்கள் சதீஸ்குமார், வினோத்குமார், சுவர்ணலதா, பாலநர்மதாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை