மேலும் செய்திகள்
உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்க கல்லுாரி களப்பயணம்
14-Oct-2025
கோவில்பாளையம்: அரசு பள்ளி மாணவர்கள் களப் பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்க்கார் சாமக்குளம் வட்டார வேளாண் துறையில் 'அட்மா' திட்டத்தில், 'இயற்கை வேளாண்மை' என்னும் தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சூலூர் வட்டாரத்தில் உள்ள செஞ்சோலை பண்ணைக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இயற்கை விவசாயி செந்தில்குமரன் பேசுகையில், தோட்டத்தில் கிடைக்கும் பசுஞ்சாணம், சருகுகள் மற்றும் வேளாண் கழிவுகளை பயன்படுத்தி விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கலாம். நோயை கட்டுப்படுத்தலாம். ரசாயன உரங்களை தவிர்க்கலாம், என தெரிவித்தார். மேலும் பண்ணையில் உள்ள பயிர்கள் மற்றும் கால்நடைகள் குறித்து விளக்கம் அளித்தார். இயற்கை வேளாண்மை குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தார். வட்டார தொழில்நுட்பம் மேலாளர் சரண்யா, மாணவர்களிடம் வேளாண் சார்ந்த பட்டப்படிப்புகள், அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பட்டறிவு பயணத்தில் சர்க்கார் சாமக்குளம், வெள்ளமடை, வெள்ளக்கிணறு, காளப்பட்டி, பீளமேடு, ஒண்டிப்புதூர் அரசு பள்ளிகளை சேர்ந்த 100 மாணவர்கள் பங்கேற்றனர்.
14-Oct-2025