கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலைவாணி மெட்ரிக் பள்ளி, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்க, மாணவர்களுக்காக, 'தினமலர்' நாளிதழ் சார்பில் இதுபோன்ற வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளியளவில் இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அதிலிருந்து தேர்ந்தெடுக் கப்படும் எட்டு அணிகள் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். சி.ஆர்.ஆர்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒண்டிப்புதூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 51 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'எச்' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவன் ஹரினேஷ் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவன் பிரதாப் ஆகியோர், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் வெங்கடேசன், முதல்வர் பாப்பு ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சூலூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 130 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவி லக் ஷனா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஹரிஷ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தாளாளர் நடராஜன், முதல்வர் வளர்மதி ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிந்தாமணிபுதூரில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 159 மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'ஏ' அணி வெற்றி பெற்றது.அந்த அணியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்கள், ஹோலி டேனியல் மேத்யூ மற்றும் ஷர்வா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சந்திராமணி மற்றும் துணை முதல்வர் ஜெகத் ஜோதி ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். கிப்ட் ஸ்பான்சர்கள் 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் நிறுவனங்கள், கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.