மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி
கோவை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்திய 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா போட்டியில் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். சேரன்மாநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'இ' அணியின் ஸ்டீவ் ஆண்டனி, பிரீனித் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'சி' அணியின் கவிதா, நிவேதா; 'டி' அணியின் ஐஸ்வர்யா, பிரியதர்ஷினி; 'ஜி' அணியின் அதர்வா, ஜெய் தர்ஷன்; 'எப்' அணியின் ஹரிஷ்குமார், இஷாக் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை ரேவதி சான்றிதழ்களை வழங்கினார். கே.கே. புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 150 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'டி' அணியின் தக் ஷதா, ஸ்ரீ பூவிழிஆகியோர் வெற்றி பெற்ற னர். இவர்களுடன், 'ஏ' அணியின் சூர்யா பிரியா, பிராணேஷ்; 'எச்' அணியின் கிளாடியா, திவிஷா; 'சி' அணியின் மகாலட்சுமி, அஞ்சனா; 'எப்' அணியி ன் ரிஷிலா, ஜெகநாத் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை சகுந்தலா சான்றிதழ்களை வழங்கினார். பி.என் புதூர் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 200 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'டி' அணியின் சந்தியா, காயத்திரி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'சி ' அணியின் ஓவியா, விஜயஸ்ரீ; 'எச்' அணியின் சுபா ஸ்ரீ, சாகியா; 'எப்' அணியின் மீனாட்சி, பிரியா தர்ஷினி; 'பி' அணியின் பிருந்தா, ஹாஷினி ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியை ஜமுனா சான்றிதழ்களை வழங்கினார். உடையாம்பாளையம் மாநகராட்சி மேல் நிலைப்பள்ளி இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 120 மாணவர்கள் பங்கேற்றனர். அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எப்' அணியின் விஷாலி, வித்யா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'எச்' அணியின் ரஷ்மிகா, காயத்திரி; 'பி' அணியின் கதிர் வேல், விக்னேஷ் குமார்; 'சி' அணியின் கமலேஷ், விஷ்ணு; 'ஜி' அணியின் வர்ஷா, மகா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் சேவியர் சான்றிதழ்களை வழங்கினார்.