உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமூக மேம்பாட்டிற்கு மாணவர்கள் உழைக்கணும்

சமூக மேம்பாட்டிற்கு மாணவர்கள் உழைக்கணும்

கோவை; நவக்கரை, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில் 13வது பட்டமளிப்பு விழா, தனலட்சுமி சீனிவாசன் பல்கலை வேந்தர் மற்றும் தனலட்சுமி கல்வி குழும நிறுவனர் சீனிவாசன் தலைமையில் நடந்தது.கோர் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் குளோபல் தலைவர் தினகரன் செல்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ''தனிப்பட்ட, பொது வாழ்வில் ஒழுக்கம் மற்றும் நேர்மை மிக்கவர்களாக மாணவர்கள் திகழ வேண்டும். சுயவளர்ச்சி மட்டுமின்றி சமூக மேம்பாட்டிற்காகவும் பாடுபட வேண்டும்,'' என்றார்.விழாவில், 99 முதுகலை பட்டதாரிகள் உட்பட 284 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பட்டதாரிகள் வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் சமூகத்திற்கு பொறுப்புடன் பங்களிப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரி செயலர் நீலராஜ், இயக்குனர்கள் வினோத், சரண்யா, முதல்வர் ஜெகதீசன், டீன் கல்வியாளர் பாகீரதி மற்றும் துறைத்தலைவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ