உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி; ரோட்டை சீரமைக்க கோரிக்கை

பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி; ரோட்டை சீரமைக்க கோரிக்கை

வால்பாறை: வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பகுதிக்கு பஸ் வசதி இல்லாததால், தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை அடுத்துள்ளது வாட்டர்பால்ஸ் எஸ்டேட், 2ம் டிவிஷன். இங்குள்ள, 10ம் நெம்பர், 8ம் நெம்பர், கொட்டப்பாத்தி உள்ளிட்ட எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.இவர்களின் குழந்தைகள், மூன்று கி.மீ., தொலைவில் உள்ள வாட்டர்பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். பள்ளிக்கு வர பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் தினமும், மூன்று கி.மீ., துாரம் நடந்து பள்ளிக்கு செல்கின்றனர்.மீண்டும், மாலையில், வீட்டிற்கு நடந்தே செல்கின்றனர். பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:வாட்டர்பால்ஸ் 2ம் டிவிஷன் பகுதியில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, வால்பாறை அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் வரை, காலை, மாலை நேரங்களில் வாட்டர்பால்ஸ் பள்ளி வழியாக அரசு பஸ் இயக்கப்பட்டது.இதனால், எஸ்டேட் பகுதியிலிருந்து பள்ளி செல்லும், நுாற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். தற்போது, வாட்டர்பால்ஸ் பேக்டரி முதல், 10ம் நெம்பர் எஸ்டேட் வரை, ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் பஸ் இயக்கப்படுவதில்லை.இதனால், வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த ரோட்டில் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள் நடந்து செல்கின்றனர். எனவே, வால்பாறை நகராட்சி சார்பில் பழுதடைந்துள்ள ரோட்டை சீரமைத்து, உடனடியாக வாட்டர்பால்ஸ் 2ம் டிவிஷனுக்கு, மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை