உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்வில் தவறிய மாணவர்களை மறுத்தேர்வுக்கு தயார்படுத்தணும்!

தேர்வில் தவறிய மாணவர்களை மறுத்தேர்வுக்கு தயார்படுத்தணும்!

- நமது நிருபர் -பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர் கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்தன. இதில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதியும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதியும் வெளியிடப்பட்டன.பொதத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், உயர் கல்வி வழிகாட்டுதல் குழு, கண்காணிப்பு குழு ஆகியவற்றுடன் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்டத்தில் அதிகளவிலான மாணவர்கள் கொண்ட, 16 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், வழிகாட்டுதல் ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அனைவரும் துணைத்தேர்வு எழுதவும், அதில் தேர்ச்சி பெறும் வகையிலும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், உயர் கல்வியில் சேர வேண்டும். கல்லுாரியில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் விபரம் முழுமையாக பெற வேண்டும்.கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத மாணவர்களையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ