உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டப்பந்தயத்தில் மின்னலாய் பாய்ந்த மாணவ, மாணவிகள்

ஓட்டப்பந்தயத்தில் மின்னலாய் பாய்ந்த மாணவ, மாணவிகள்

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடையில் உள்ள டாக்டர்.ஆர். வி. கலை, அறிவியல் கல்லூரியில், நேற்று விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் ரூபா தலைமையேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.துவக்க நிகழ்வாக, விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர். பின், ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், வட்டெறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் சீறி பாய்ந்து ஓடினர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, இன்று நடக்கும் விளையாட்டு தின விழாவில் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி