உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ஆய்வு

காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ஆய்வு

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுப்பது குறித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.முன்னதாக, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். தொடர்ந்து, அட்டுக்கல், குப்பேபாளையம், பச்சான்வயல்பதி, செம்மேடு, பெருமாள்கோவில்பதி, வடிவேலாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நேரில் ஆய்வு செய்தார்.பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து கலந்துரையாடினார்.ஆய்வில், மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயகுமார், போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத், தொண்டாமுத்தூர் ஒன்றிய சேர்மன் மதுமதி, பி.டி.ஓ., ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை