உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நர்சிங் படித்து விட்டு மருத்துவம்: போலி பெண் டாக்டர் கைது

 நர்சிங் படித்து விட்டு மருத்துவம்: போலி பெண் டாக்டர் கைது

சூலூர்: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே ஜே. கிருஷ்ணாபுரத்தில், போலி பெண் டாக்டர் கிளினிக் நடத்தி வருவதாக, மாவட்ட மருத்துவ இணை இயக்குனருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, சூலூர் அரசு மருத்துவமனை டாக்டர் கஜேந்திரன் தலைமையில் கண்காணிப்பாளர் குமரவேல், நர்ஸ் மதிலட்சுமி, ஜே. கிருஷ்ணாபுரம் வி.ஏ.ஓ., ஆகியோர் அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே இருந்த நேஹா கிளினிக்கில் சோதனை நடத்தினர். அங்கு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை விசாரித்தனர். அவர் வடசித்தூரை சேர்ந்த பட்டு ராஜா மனைவி முத்துலட்சுமி,56, என்பதும், அவர் நர்சிங் படித்துவிட்டு, டாக்டர் எனக்கூறி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிந்தது. டாக்டருக்கு படித்ததற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து, அங்கிருந்த ஊசிகள் மற்றும் மாத்திரைகளை பறிமுதல் செய்த குழுவினர், சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துலட்சுமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்