உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பி.எப். அலுவலகம் நடத்தும் சந்தாதாரர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

 பி.எப். அலுவலகம் நடத்தும் சந்தாதாரர்கள் குறைதீர்ப்பு கூட்டம்

கோவை: கோவை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும், 29ம் தேதி குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. பெரியநாயக்கன் பாளையம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள, ஜி.கே. தேவராஜுலு தாயாரம்மாள் கல்யாண மண்டபத்திலும், நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய கோர்ட் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் உள்ள, செயின்ட் தாமஸ் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ.சி., உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர், காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை நேரில் முறையிடலாம். யூஏஎன் (UAN) எண், வைப்பு நிதி கணக்கு எண் அல்லது ஓய்வூதிய நியமன ஆணை எண் அல்லது இ.எஸ்.ஐ.சி., எண் கொண்டு வருவது அவசியம். பி.எப்., தொடர்பான குறைகளை, pghs.epfindia.gov.inஎன்ற மின்னஞ்சல் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாம். கோவை மண்டல அலுவலகம் சார்பில், வெளியே சென்று மக்களை சந்திக்கும் திட்டத்தின் வாயிலாக, 20 கூட்டங்களை நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்கள் வாயிலாக கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், 909 பேரின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்க முடியாத உறுப்பினர்கள், அனைத்து வேலை நாட்களிலும் கோவை மண்டல அலுவலகம் மற்றும் பொள்ளாச்சி, ஊட்டி, குன்னுாரில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின், மாவட்ட அலுவலகங்களுக்கு சென்று பார்வையிடலாம். இந்த தகவலை, கோவை மண்டல வைப்பு நிதி கமிஷனர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை