உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலையில் பதிவாளர் திடீர் மாற்றம்

பாரதியார் பல்கலையில் பதிவாளர் திடீர் மாற்றம்

கோவை;பாரதியார் பல்கலையில், கடந்த சில ஆண்டுகளாக பதிவாளர் பொறுப்பு வகித்த முருகவேல் 60 வயதை கடந்த நிலையில், புதிதாக எம்.பி.ஏ., இயக்குனர் பதவி வகிக்கும் ரூபா குணசீலன் புதிய பதிவாளராக (பொறுப்பு) தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்கலையில், கடந்த பல ஆண்டுகளாக பதிவாளர் பதவி காலியாகவுள்ளது. உடற்கல்வித்துறை பேராசிரியர் முருகவேல், கடந்த சில ஆண்டுகளாக இப்பதவியில் இருந்து, பொறுப்புகளை கவனித்து வந்தார். இவர், 60 வயதை கடந்த நிலையிலும், இப்பொறுப்பில் தொடர்ந்தது பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்நிலையில், நேற்று பதிவாளர் பொறுப்பில் இருந்து முருகவேல் விடுவிக்கப்பட்டு, பணிமூப்பு அடிப்படையில், எம்.பி.ஏ., இயக்குனர் மற்றும் ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த, ரூபா குணசீலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை