உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மின் தடத்தில் திடீர் பழுது: சுந்தராபுரத்தில் மின் தடை

 மின் தடத்தில் திடீர் பழுது: சுந்தராபுரத்தில் மின் தடை

கோவை: சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலையை கடந்து செல்லும் உயர் மின் அழுத்த மின்தடத்தில் இரு இடங்களில் பி.டி.இன்சுலேட்டர் வெடித்ததால் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் சாலை பகுதிகளில் நேற்று மாலைஒரு மணி நேரம்5:15 லிருந்து 6:15 வரை மின் சப்ளை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மக்களும் வர்த்தகர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த கோவை தெற்கு கோட்ட மின்பொறியாளர்கள், உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்விற்குப்பின்பு பி.டி.இன்சுலேட்டர்கள் வெடித்து மின் தடை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்துகுறிச்சி துணை மின் நிலையத்தில் மின்சப்ளையை நிறுத்தம் செய்து அதன் பின் மின் தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு பி.டி.இன்சுலேட்டர்களை மாற்றிய பின்பு மின்சப்ளை வழங்கப்பட்டது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ''உயர்மின்அழுத்தப் பாதையில் குறிப்பிட்ட தொலைவுக்கு இடையே மின் கம்பங்களும் டிரான்ஸ்பார்மர்களும் இருக்கும். அதில் பொருத்தப்பட்டுள்ள பி.டி.இன்சுலேட்டர் உரசல் மற்றும் மழை வெயில் காரணமாக வெடிக்கும்.ஒரு இடத்திலிருந்து மூன்று இடத்திற்கு பிரியும் ஜங்சன்களில் இது போன்று ஏற்படும். வேறு பி.டி.இன்சுலேட்டர்கள் பொருத்தினால் தான் சப்ளை கிடைக்கும். இதனால் மின்சப்ளையில் தாமதம் ஏற்படும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ