உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நீண்ட நேரம் நீடிக்கும் பனிப்பொழிவால் அவதி

 நீண்ட நேரம் நீடிக்கும் பனிப்பொழிவால் அவதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த சில தினங்களாக, காலையில் நீண்ட நேரம் வரை கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. வழக்கமாக மார்கழி மாதத்தில் துவங்கும் குளிர்ந்த சீதோஷ்ணம் மற்றும் பனிப்பொழிவு தை மாதம் வரை நிலவும். தற்போது, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று வழக்கத்துக்கு மாறாக, அதிகாலை நேரம் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. பகலில் வெயில் நிலவினாலும் காற்று வீசும்போது, பனியின் தாக்கம் உணரப்பட்டது. அதிகாலையில் நீண்ட நேரம் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, வெளியிடங்களில் ரோடுகளில் பனிமூட்டமாக காட்சியளித்தது. எதிரே வரும் வாகனங்கள், ரோட்டோர மரங்கள், கட்டடங்கள் கூட தெளிவாக தெரியாத வகையில், பனிப்பொழிவு அதிகம் இருந்தது. இதனால், வாகனங்களில் முகப்பு விளக்கு எரியச்செய்து இயக்கப்பட்டன. வழக்கமாக காலை நேரம் சிறிது நேரம் காணப்படும் குளிர் சீதோஷ்ணம் நீண்ட நேரம் நீடித்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை