உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

சூலத்தம்மன் கோவில் ஆண்டு விழா

பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தொப்பம்பட்டி சூலத்தம்மன் திருக்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு விழா நடந்தது.தொப்பம்பட்டி ராஜராஜேஸ்வரி நகரில் சூலத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு, 9ம் ஆண்டு விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, 6:30 மணிக்கு பால்குட ஊர்வலம், 9:30 மணிக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:30 மணிக்கு அம்பிகைக்கு, 108 சங்க அபிஷேகம், ஹோம பூஜை, திருக்கல்யாண வைபவம், மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை