உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கத்தி, ரத்தமின்றி ஆண்களுக்கு இன்று அறுவை சிகிச்சை

கத்தி, ரத்தமின்றி ஆண்களுக்கு இன்று அறுவை சிகிச்சை

கோவை; ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவை சிகிச்சை முகாம், சுண்டக்காமுத்துார் அரசு மருத்துவமனையில், இன்று இலவசமாக நடைபெறுகிறது. மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் கவுரி வெளியிட்ட அறிக்கை: கத்தி, ரத்தமின்றி, எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி செய்யப்படும் இச்சிகிச்சை மேற்கொள்ளும் ஆண்களுக்கு, அரசு மற்றும் தனியார் ஸ்பான்சர் வாயிலாக, 3,100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இச்சிகிச்சை செய்வதால், இல்லற வாழ்க்கைக்கோ, கடின உழைப்புக்கோ தடை ஏற்படாது. பெண்களுக்கு செய்யப்படும் சிகிச்சையை காட்டிலும், பல மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவேண்டிய அவசியமில்லை. விபரங்களுக்கு 80728 65541 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை