மேலும் செய்திகள்
கல்லுாரிகளில் புதிய மாணவர்களுக்கு 'வெல்கம்!'
11-Sep-2024
வால்பாறை : வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படிக்கின்றனர். கல்லுாரி வளாகத்திலேயே மாணவர்களுக்கான விடுதி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சுரேஷ்குமார் அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.அதன்பின், அவர் கூறுகையில், ''மாணவர்கள் தற்காலிமாக தங்கி படிக்கும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான 'யாத்திரை நிவாஸ்' கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்திலேயே மாணவர்களுக்கான விடுதி கட்ட, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அனுப்பப்படும். விரைவில் தங்கும் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
11-Sep-2024