உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் 3 மாத சம்பளம் கிடைக்காமல் அவதி

துாய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் 3 மாத சம்பளம் கிடைக்காமல் அவதி

வால்பாறை; துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் பரப்புரையாளர்களுக்கு, மூன்று மாத சம்பளம் கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பையை தரம் பிரித்து, இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்த திட்டத்தில், துாய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள் உட்பட மொத்தம், 53 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக, இந்த திட்டத்தில் பரப்புரையாளர்களாக பணியாற்றி வரும், 7 பேருக்கு கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.இது குறித்து பரப்புரையாளர்கள் கூறுகையில், 'துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறை நகராட்சியில் பரப்புரையாளர்களாக பணியாற்றி வருகிறோம். கடும் சிரமத்துக்கு மத்தியில் பணிபுரியும் நிலையில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.'நகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளத்தை வழங்க வேண்டும்,' என்றனர்.நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''தொழில்நுட்ப பிரச்னையால், பரப்புரையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்துள்ளோம். விரைவில் நிலுவையில் உள்ள மூன்று மாத சம்பளம் வழங்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி