மேலும் செய்திகள்
பெத்திசெமினார் பள்ளி மாணவருக்கு பாராட்டு
17-Nov-2024
பொள்ளாச்சி; நெகமம் அருகே, சின்னேரிபாளையம் சுவஸ்திக் மெட்ரிக் பள்ளியில் யோகாசன உலக சாதனை நிகழ்வு நடந்தது. பள்ளித் தாளாளர் தீபாகாந்தி தலைமை வகித்தார்.தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து, அர்த்த மச்சேந்திரா ஆசனத்தை உடல் அசைவற்ற நிலையில், 15 நிமிடங்கள் செய்து காட்டி அசத்தினர். அதன் வாயிலாக, பெங்களூரு குளோபல் உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றனர்.இதையடுத்து, பள்ளி துணை முதல்வர் மோகன்ராஜ், யோகா உருவான வரலாறு, யோகாவின் பயன்கள் குறித்து பேசினார். பெங்களூரு குளோபல் உலக சாதனை அமைப்பு மேலாளர் சுரேந்திரன் பங்கேற்று, சாதனை புரிந்த மாணவர்களுக்கு, பதக்கங்கள் மற்றும் சாதனை பதிவுக்கான சான்றிதழை வழங்கினார். பள்ளி முதல்வர் தமிழரசி, யோகா ஆசிரியர் கிருஷ்ணராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
17-Nov-2024