டேபிள் டென்னிஸ் போட்டி; மகளிர் பாலிடெக்னிக் டாப்
கோவை; டிவிஷன்கள் இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில் கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அணி வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளது.'இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேசன் தமிழ்நாடு அண்ட் புதுச்சேரி'(ஐ.பி.ஏ.ஏ.,) டேபிள் டென்னிஸ் போட்டி இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது. இதில், ஏழு டிவிஷன் அணிகள் பங்கேற்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தின. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த முதல் அரையிறுதியில், அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி அணி(கோவை டிவிஷன்), 3-0 என்ற செட் கணக்கில் கிருஷ்ணகிரி புனித ஜோசப் பாலிடெக்னிக் கல்லுாரி அணியை(வேலுார் டிவிஷன்) வென்றது.இரண்டாம் அரையிறுதியில், சேலம் தியாகராஜா பாலிடெக்னிக் அணி, 3-2 என்ற செட் கணக்கில் கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி அணியை(ஈரோடு டிவிஷன்) வீழ்த்தியது. இறுதிப்போட்டியில், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அணி, 3-2 என்ற செட் கணக்கில் சேலம் தியாகராஜா கல்லுாரி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் புனித ஜோசப் பாலிடெக்னிக் அணியும், கொங்கு பாலிடெக்னிக் அணியும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில், 3-2 என்ற செட் கணக்கில் புனித ஜோசப் பாலிடெக்னிக் அணி வெற்றிபெற்றது. நிறைவில், பரிசுகள் வழங்கப்பட்டன.