டேபிள் டென்னிஸ்: இந்துஸ்தான் கல்லுாரி டாப்
கோவை : அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி முதலிடம் பிடித்தது.அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. 10க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் முதல் அரையிறுதியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில், டாக்டர் மகாலிங்கம் இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.இரண்டாவது அரையிறுதியில், இந்துஸ்தான் இன்ஜி., கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 2-1 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.