மேலும் செய்திகள்
தம்பு பள்ளியில் கல்வி கண்காட்சி
28-Jan-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளியின் செயலாளர் அபர்ணா கார்த்திகேயன் வரவேற்றார். தேசிய அளவிலான மராத்தான் ஓட்ட பந்தய வீராங்கனை லதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கொடியசைத்து விழாவை துவக்கி வைத்தார். உடல் நலமே மன நலத்துக்கு அடிப்படை, தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறினார். தொடர்ந்து நடந்த போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில், பள்ளியின் நிர்வாக குடும்பத்தினர், ஆசிரியர் மற்றும், 500க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்து கொண்டனர். விழாவில், நிகழ்ச்சிகளை பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர் ஒருங்கிணைத்தார். ஆசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்.
28-Jan-2025