உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தக்காளி, வெங்காயம் ஒப்பந்த சாகுபடி தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தக்காளி, வெங்காயம் ஒப்பந்த சாகுபடி தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவை; தக்காளி, வெங்காயத்தின் விலை ஏற்றத்தாழ்வுகளால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க, அரசே குறைந்தபட்ச விலை நிர்ணயித்து, ஒப்பந்த சாகுபடிக்கு வகை செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கம் கூறியிருப்பதாவது:பண வீக்கத்துக்கு 5 முக்கியப் பொருட்கள்தான் காரணம். அதில் வேளாண் விளை பொருட்களான, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்குக்கு பெரும் பங்கு உண்டு என, மத்திய நிதித்துறை செயலர் கவலை தெரிவித்துள்ளார்.இதனை ஏற்கனவே, கோவை பகுதி விவசாயிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.கோவை, தர்மபுரி, நீலகிரி விவசாயிகள், தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலை ஏற்ற இறக்கத்தால் எதிர்பாராத நஷ்டங்களைச் சந்திப்பது வாடிக்கையாகி விட்டது.எனவே, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே ஆண்டு முழுதும், கொள்முதல் வரம்பின்றி, பண்ணைக் கொள்முதல் செய்ய கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இந்த ஒப்பந்த முறை சாகுபடியால், விவசாயிகள், பொதுமக்கள் என இருதரப்புக்குமே நன்மை கிடைக்கும்.நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுடன் ஒப்பந்தக் கொள்முதல் முறையை அரசு நடைமுறைப்படுத்தி, கோவை மாவட்டம் முன்னோடியாக விளங்கச் செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்க, கோவைக் கிளை நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை