உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழ்ச் சங்க விழா மாணவர்களுக்கு விருது

தமிழ்ச் சங்க விழா மாணவர்களுக்கு விருது

மேட்டுப்பாளையம்; தமிழ் சங்கத்தின் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பில் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழில் அதிக மதிப்பெண் பெற்ற, மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. இதில், 43 பள்ளிகளைச் சேர்ந்த, 130 மாணவ, மாணவிகளும், 71 ஆசிரியர்களும் பங்கேற்றனர். விழாவுக்கு தமிழ் சங்க தலைவர் சோலைமலை, தமிழ் சங்க அறக்கட்டளை தலைவர் வேலுச்சாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இயக்க செயலாளர் ஜெயராமன் வரவேற்றார். தமிழ் சங்க உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சான்றிதழும், கேடயங்களும் வழங்கினர். விழாவில் சங்க நிர்வாகிகள் மணி, தாமோதரன், துரைராஜ் உள்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை