| ADDED : டிச 08, 2025 05:39 AM
ஆனைமலை: ஆனைமலை அருகே, சோமந்துறை சித்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்மொழியின் சிறப்புகளை மாணவர்கள் அறியும் வகையில், தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி, தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஒவ்வொரு பள்ளியிலும் மூன்று நிகழ்ச்சிகளை நடத்திட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, ஆனைமலை அருகே சோமந்துறை சித்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் முக்கூடல் இரண்டாவது நிகழ்ச்சி நடந்தது. பள்ளி முதுகலை தமிழாசிரியர் மனுவேல் வரவேற்றார். தலைமையாசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். கவிஞர் பூபாலன், இரண்டு கவிதைகளை வாசித்து பேசினார். கவிஞர் சுடர்விழி, 'கேட்பினும் பெரிது கேள்' என்ற தலைப்பில் பேசுகையில், 'மொழியின் பெருமைகளையும், இளம் வயதில் மாணவர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களை அதிகம் கேட்டால், நாளை வரும் காலம் உன் வார்த்தைகளை கேட்கும்,' என்றார். கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் ஈஸ்வரி நன்றி கூறினார்.