டேங்கர் லாரி விபத்து டிரைவருக்கு சிறை
கோவை:கோவை, உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் காஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி நேற்று முன்தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டேங்கரில் சேதம் ஏற்பட்டு, காஸ் கசிவு ஏற்பட்டது. பல்வேறு துறை அதிகாரிகள், காஸ் கசிவை நிறுத்தி, 11 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் லாரியை மீட்டனர்.மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், லாரி டிரைவர் அலட்சியமாக லாரியை இயக்கியதால், விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. டிரைவர் ராதாகிருஷ்ணன் மீது ஏழு பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர்.