மேலும் செய்திகள்
நாளைய மின்தடை: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
08-Sep-2025
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் தார் சாலை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இங்குள்ள, 13 வது வார்டு, பழுதடைந்த சாலையை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணி, 10 லட்ச ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் அறிவரசு பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி ஆணையாளர் பூவேந்திரன், துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன், கவுன்சிலர்கள் வனிதாமணி, துரை செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
08-Sep-2025