உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேயிலை தொழிலாளர் சம்பள பேச்சு தோல்வி

தேயிலை தொழிலாளர் சம்பள பேச்சு தோல்வி

கோவை: வால்பாறை தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், சூபர்வைசர்கள் மற்றும் திறன் தொழிலாளர்களுக்கு ஜூலை 1 முதல் கூலியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக, கோவையில் உள்ள தமிழ்நாடு தோட்ட அதிபர் சங்கத்தில் பேச்சு நடந்தது. நாளொன்றுக்கு, 475 ரூபாய் வீதம் 70 சதவீத தொழிலாளர்கள் ஊதியம் பெற்று வரும் நிலையில், 30 சதவீத தொழிலாளர்களுக்கு, அதை விட அதிகமாக தினக்கூலி வழங்க முடியாது என்று தோட்ட அதிபர்கள் கூறியதால், பேச்சு தோல்வியில் முடிந்தது. ஆனைமலை, வால்பாறை, நீலகிரி, வயநாடு, தமிழ்நாடு தோட்ட அதிபர்கள் சங்க நிர்வாகிகள், அண்ணா, தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., வி.சி.க., உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி