உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெருவிளக்கு எரியாததால் டெர்ரர்; பாதையை மறைக்கிறது புதர் மாநகராட்சி முதல் வார்டில் காத்திருக்குது டேஞ்சர்

தெருவிளக்கு எரியாததால் டெர்ரர்; பாதையை மறைக்கிறது புதர் மாநகராட்சி முதல் வார்டில் காத்திருக்குது டேஞ்சர்

சாலையை மறைக்கும் புதர் மாநகராட்சி முதல் வார்டு, திருமுருகன் நகர் செல்லும் சாலையின் இருபுறமும் புதர் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதனால், சாலையின் எதிர்ப்புறம் வாகனங்கள் வருவது தெரியாமல் விபத்து நடக்கிறது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாததால், வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். - சாந்தி: தினமும் விபத்து துடியலுார் ரயில்வே கேட் முன்பு, பல இடங்களில் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுகின்றனர். சேதமடைந்த சாலையால், தினமும் இப்பகுதியில் விபத்து நடக்கிறது. - ராஜா: தேங்கி நிற்கும் மழைநீர் மாநகராட்சி, 14வது வார்டு, முருகன் நகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுத்தொல்லை அதிகரிப்பதுடன், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தண்ணீர் வடிய தகுந்த நடவடிக்கை வேண்டும். - கோகுல்: இரவில் பாதுகாப்பில்லை குனியமுத்துார், 87வது வார்டு, மின் நகர் பகுதியில் பிரதான சாலையில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. பல வாரங்களாக தெருவிளக்கு எரியாதது குறித்து, பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. குடியிருப்புவாசிகள் இரவு நேரங்களில் வெளியே செல்லவே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. - அபெல்: தெருவிளக்கு பழுது செல்வபுரம், என்.எஸ்.கே.வீதியில் கடந்த ஒரு மாதமாக, தெருவிளக்கு எரியவில்லை. பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். பழுதான தெருவிளக்குகளை, விரைந்து சரிசெய்து வேண்டும். - அசோக்: தண்ணீரின்றி தவிப்பு மாநகராட்சி, 40வது வார்டு, ராஜீவ்காந்தி நகர், கடந்த பத்து நாட்களுக்கு மேலாக உப்பு தண்ணீர் மோட்டார் பழுதாகியுள்ளது. வார்டு கவுன்சிலரிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை. 350 குடும்பங்கள் தண்ணீரின்றி தவிக்கின்றனர். - சிராஜ்: சேதமடைந்த கம்பம் ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம், திருவள்ளுவர் நகரில் மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் முழுவதும் விரிசல்களாக காணப்படுகிறது. சேதமடைந்த கம்பத்தை, உடனடியாக சீரமைக்க வேண்டும். - மோகித்: கரையில் ஹோட்டல் கழிவு நரசிம்மநாயக்கன்பாளையம், பாலவிநாயகர் நகர் செல்லும் சாலையில், கவுசிகா நதிக்கரையில் ஹோட்டல்களிலிருந்து பெறப்படும் கழிவு மூட்டை, மூட்டையாய் கொட்டப்படுகிறது. இதனால், இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. - பாலகிருஷ்ணன்: 'குடி'மகன்கள் அட்டூழியம் சுந்தராபுரம், காமராஜர்நகர் - எல்.ஐ.சி., காலனி செல்லும் சாலையில் டாஸ்மாக் அமைந் துள்ளது. இங்கு மது வாங்கும் சிலர் சாலையோரமே அமர்ந்து மது அருந் துகின்றனர். அவ்வழியில் செல்லும் பெண்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்கின்றனர். - ராதா: கழிவில் முளைத்த செடி மாநகராட்சி, 42வது வார்டு, அண்ணா நகர், நான்காவது வீதியில் குடிநீர் குழாய் அருகே சாக்கடை கால்வாய் சுத்தம் செய்த பின், கழிவை குடிநீர் குழாய் அருகே கொட்டினர். நான்கு மாதங்களுக்கு மேலாகியும் அகற்றாததால், அதில் செடி முளைத்துவிட்டது. தண்ணீர் பிடிக்க சிரமமாக உள்ளது. - சுப்பிரமணி: சகதியான ரோடு விளாங்குறிச்சி, 24வது வார்டு, கவுதமாபுரி நகர் பகுதியில் மண் ரோடு மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக இருக்கிறது. நடந்து செல்பவர்கள், பைக்கில் செல்வோரும் சகதியான ரோட்டில் விழுகின்றனர். கார், வேன் போன்ற வாகனங்களின் சக்கரங்கள் சேற்றில் மாட்டிக்கொள்கின்றன. - கிருஷ்ணா:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ