உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல்; விஸ்வகர்மா ஜெகத்குரு கண்டனம்

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல்; விஸ்வகர்மா ஜெகத்குரு கண்டனம்

போத்தனுார்; காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, விஸ்வகர்மா ஜெகத்குரு கண்டனம் தெரிவித்துள்ளார்.விஸ்வகர்மா ஜெகத்குரு சிவசண்முக சுந்தர பாபு சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை:காஷ்மீர் மாநிலம், பஹல்காம் அருகே சுற்றுலா பயணியர் கூடியிருந்த இடத்தில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 28 பேர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்திருக்கின்றனர். இது, கொடூரத்தின் உச்சகட்டம். மனிதநேயமற்ற செயல். முழுக்க, முழுக்க மத ரீதியான தாக்குதல். இக்கொடுஞ்செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பின்புலமாக உள்ள மத தீவிரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை, தமிழ்நாடு, புதுச்சேரி விஸ்வகர்மா மக்கள் கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ