உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டெக்ஸ்மோ கோப்பை வாலிபால் போட்டி துவக்கம்

டெக்ஸ்மோ கோப்பை வாலிபால் போட்டி துவக்கம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில், டெக்ஸ்மோ கோப்பைக்கான, மாநில அளவிலான வாலிபால் போட்டி ஆரவாரமாக துவங்கியது. முதல் நாள் முதல் ஆட்டத்தில், இந்தியன் வங்கி, தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதின.துடியலூரில் உள்ள அக்வா குரூப் நிறுவனத்தின் சார்பில், ராமசாமி நினைவு டெக்ஸ்மோ கோப்பை, 54வது ஆண்டு மாநில அளவிலான வாலிபால் போட்டிகள், நேற்று இரவு துவங்கின.போட்டிகள், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் நடக்கின்றன. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கஸ்டம்ஸ், அக்வா பம்ப் ஸ்போர்ட்ஸ் கிளப், தமிழ்நாடு போலீஸ் அணிகள் மோதுகின்றன. போட்டிகள், 'லீக்' முறையில் நடக்கின்றன. இன்று காலை, 8:00 மணிக்கு அக்வா டெக்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டி துவங்குகிறது. இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, 32 அணிகள் பங்கேற்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி