உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பஸ்சில் வெளியேறிய கரும் புகை சிரமத்துக்குள்ளான வாகன ஓட்டுநர்கள்

அரசு பஸ்சில் வெளியேறிய கரும் புகை சிரமத்துக்குள்ளான வாகன ஓட்டுநர்கள்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வழியாக, பண்ணாரிக்கு செல்லும் அரசு பஸ்சில் இருந்து கரும் புகை வெளியேறியதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்பட்டனர்.பொள்ளாச்சியில் இருந்தும், பொள்ளாச்சி வழியாக செல்லும் அரசு பஸ்களும் போதிய பராமரிப்பின்றி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். பஸ் பஞ்சராகி நிற்பது; பழுதாகி பாதியில் நிற்பது போன்ற பல்வேறு பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.அதற்கு உதாரணம் போன்று,நேற்றுமுன்தினம்பொள்ளாச்சி வழியாக பண்ணாரிக்கு செல்லும் அரசு பஸ் நிலை காணப்பட்டது.அந்த பஸ்சில் இருந்து அதிகளவுகரும்புகை வெளியேறியதால்,வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகினர்.'சினிமா' படத்தில் வருவது போன்று அரசு பஸ்களின் நிலை உள்ளது. கரும்புகையை அதிகளவு வெளியேற்றியபடி சென்ற பண்ணாரி செல்லும் அரசு பஸ்சால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஒரு சிலர், ஒரு கையால் மூக்கை மூடியபடியும், ஒரு கையால் வாகனத்தை இயக்கினர்.மேலும், கரும்புகை வாகன ஓட்டுநர்களின் கண்களை சூழ்ந்ததால், தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டது.அரசு பஸ்கள் தகுதிச்சான்றுடன் தான் இயங்குகின்றன என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மக்களுக்கும், இயற்கைக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தும் அரசு பஸ்கள் குறித்து ஆய்வு செய்து குறைபாடுகளை களைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பழுதான பஸ்களை மாற்றி, புதிய பஸ்களை இயக்க அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ