உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குண்டும் குழியுமான அன்னுார்-அவிநாசி சாலை; விரைவில் சீரமைக்க வேண்டும்

குண்டும் குழியுமான அன்னுார்-அவிநாசி சாலை; விரைவில் சீரமைக்க வேண்டும்

அன்னுார்; அன்னுார்-அவிநாசி சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளதால் தினமும் விபத்து நடக்கிறது. அவிநாசியிலிருந்து மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ. துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கி, சோமனுார் பிரிவு வரை, சாலை தோண்டப்பட்டது. அதன் பிறகு சாலை அமைக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆறு மாத காலமாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஜல்லிக்கற்கள் பெயர்ந்து புழுதி பறக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திலும், அன்னுார் பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. விரைவில் இந்த வழித்தடத்தில் பாதையை சீரமைக்க வேண்டும்,' என, அன்னுார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை