உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனமழையால் நிரம்பிய தேவம்பாடிவலசு குளம்

கனமழையால் நிரம்பிய தேவம்பாடிவலசு குளம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு குளம், 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 3,500 அடி நீளம் உள்ள குளத்தில், 6.6 மில்லியன் கனஅடி நீரை தேக்கலாம். இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. குளத்தின் வாயிலாக, 220 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும், மழைநீரை ஆதாரமாக கொண்ட குளம் நிரம்பினால், தேவம்பாடி மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மழைக்காலங்களில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குளம் கடந்த, 2002ம் ஆண்டு நிரம்பியது. அதன் பின், குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. பராமரிப்பில்லாமல் இருந்த குளத்தை துார்வாரி வீணாக செல்லும் மழைநீரை சேமிக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுக்கு முன் விவசாயிகள் மற்றும் அரசு உதவியுடன் குளம் துார்வாரப்பட்டது. இதனையடுத்து, இரண்டு முறை குளம் நிரம்பியது. கடந்தாண்டு பருவமழை போதியளவு பெய்யாததால் குளம் நிரம்பவில்லை. நடப்பாண்டு பெய்த தொடர் மழையால் குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்து நிரம்பிய நிலையில் காட்சி அளிக்கிறது. விவசாயிகள் கூறுகையில்,'தேவம்பாடிவலசு குளம், 6.6 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். தற்போது, குளம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குளம் நிரம்பியுள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை