மேலும் செய்திகள்
லீமெரிடியனில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம்
44 minutes ago
சிறப்பு தள்ளுபடிகளுடன் கேரளா பர்னிச்சர் மேளா
45 minutes ago
ஆறாவது நாளாக நர்ஸ்கள் போராட்டம்
46 minutes ago
கோவை;ட்ரோனை பறக்கவிட்டு கைத்தட்டி ரசிக்கும் குட்டீஸ்கள், பிரைன் கேம்ஸ், மேஜிக் டிராயிங், ஓரிகாமி உருவங்களோடு செல்பி, கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போல வேடமிட்டவர்களுடன் டான்ஸ் என, அரங்கம் முழுக்க, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்திருந்தன.பள்ளி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு வரும் பெற்றோர், குழந்தைகளை கவர, ஒவ்வொரு பள்ளியும் தங்களின் கல்விசாரா செயல்பாடுகளை காட்சிப்படுத்தி அசத்தியுள்ளன. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமங்களின் பள்ளி செயல்பாடுகள், டிஜிட்டல் வடிவில் விளக்கப்பட்டிருந்தன.சந்திரமாரி இன்டர்நேஷனல் பள்ளியில், மாணவர்களின் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதோடு, குழந்தைகளே இயக்கும் வகையில், அரங்கில் இடம்பெற்ற ட்ரோன் மேலே பறப்பதை ஆர்வமுடன் பார்த்தனர். சமஸ்டி இன்டர்நேஷனல் பள்ளி அரங்குக்குள் வரும் குட்டீஸ்களை, விதைப்பந்து பென்சிலோடு வரவேற்கின்றனர். மிடாஸ்டச் பள்ளி அரங்கில், மான்டிசரி முறை கற்றல் உபகரணங்கள் இருப்பதால், குழந்தைகள் விருப்பம் போல வரைந்து விளையாடுகின்றனர்.இந்துஸ்தான் இன்டர்நேஷனல் பள்ளி அரங்கில், மீன், யானை, பூச்சிகளின் ஓரிகாமி உருவங்கள் இருப்பதால், குடும்பத்தோடு வருவோர் செல்பி எடுத்து கொள்கின்றனர். ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளி அரங்கில், நுழைவுத்தேர்வுகளுடன் பள்ளிக்கல்வி செயல்பாடுகள் விரிவாக விளக்கப்படுகிறது.விவேகாலயா கல்வி குழும அரங்கில், மேஜிக் டிராயிங் கிட் உள்ளது. ஜி.ஆர்.ஜி., மாடர்ன் ஸ்காலர்ஸ் அரங்கிற்கு வருவோரை, மரக்கன்று கொடுத்து வரவேற்கின்றனர். ஆர்.கே.எஸ்., கல்வி நிலைய அரங்கில், கடலைமிட்டாய் கொடுத்த பிறகு, பள்ளி செயல்பாடுகளை விளக்குகின்றனர்.மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளி அரங்கில், ஐ.பி., சி.பி.எஸ்.இ., என்.ஐ.ஓ.எஸ்., போன்ற சிலபஸ் முறைகள், பள்ளி செயல்பாடுகளை, விரிவாக எடுத்துரைக்கின்றனர். நேஷனல் மாடல் பள்ளிகள் அரங்கிற்குள் வரும் குழந்தைகளின், மூளையை சுறுசுறுப்பாக்க, நான்கு வகை பிரைன் கேம்ஸ் இருப்பதால், குட்டீஸ்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
44 minutes ago
45 minutes ago
46 minutes ago