உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாறல் நின்னுப்போச்சு; 3 நாள் மழை இருக்காது!

துாறல் நின்னுப்போச்சு; 3 நாள் மழை இருக்காது!

கோவை: வேளாண் பருவநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கோவை மாவட்டத்தில், வரும் 13ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் வரும் 12ம் தேதி வரை, கோவை மாவட்டத்தில் பெரிய அளவில் மழை இருக்காது. வரும் 13ம் தேதி, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கில் அதிகபட்சமாக 4.9 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.அதே நாளில், கிணத்துக்கடவு 4.1, , சுல்தான்பேட்டை 3.6, காரமடை 2.8, அன்னூர், 2.1, தொண்டாமுத்தூரில் 2.1 ஆனைமலை 1.4, மதுக்கரை 2.2, பெ.நா.பாளையம், 2.0, சர்க்கார் சாமக்குளம் 1.6, சூலூர் 1.9 மி.மீ., மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.காற்றின் வேகம் மணிக்கு 6 கி.மீ., என்பதில் இருந்து, 4 கி.மீ., ஆக குறையும். அதிகபட்ச வெப்பநிலை சராசரியாக 31 ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 22 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.இவ்வாறு, வேளாண் பருவநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு அறிவுரை

n மழைக்காலங்களில், கறவை மாடுகளுக்கு மடிநோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, பால் கறந்தவுடன் மடியை, பொட்டாசியம் பர்மாங் கனேட் கரைசலைப் பயன்படுத்தி, கழுவ வேண்டும்.n நெற்பயிர்களில் நெல் குலை நோய் (ரைஸ் பிளாஸ்ட்) ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அசோஸைட்ரோபின் 25எஸ்.சி., மருந்தை உரிய வழிமுறைகளின் படி தெளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ